தேசிய பத்திரிகையாளர் தினம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0
59

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் திகதி தேசிய பத்திரிகையாளர் தினம் அனுஷ்க்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று சகல ஊடகவியலாளர்களினதும் இடைவிடாத முயற்சிகளுக்கு நாம் தலை வணங்குகிறோம். பத்திரிகையாளர்களின் தைரியமே ஜனநாயக்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது.

ஒரு சாராரில் கட்டுப்படாமல் பத்திரிகைத் துறை செழிப்படைய வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களுடன் உறுதியாக நிற்போம்” என தெரிவித்துள்ளார்.