நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும பயனாளர்களுக்கான தொகையை இன்று வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பயனாளிகளும் தமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெற முடியும்.
16 இலட்சத்து 92, 481 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, 10 பில்லியன் 939 மில்லியன் 894 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கப்படவுள்ளது.