பூசணிக்காயை படகாக்கி பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!

0
48

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல வருட கனவு.

இந்நிலையில் அவரது கனவை நனவாக்கி கின்ன்ஸிலும் இடம்பிடித்திருக்கின்றார். இதற்காக கடந்த ஜூலை மத்தியில் வளர்க்கப்பட்ட பூசணிக்காய் அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது.

429.26 செ.மீ. சுற்றவுடன் 555.2 கிலோ எடை கொண்டுள்ளது. ஒரு பெரிய பியானோ அல்லது பெரிய ஒட்டகம் அளவுக்கு உள்ள இந்த பூசணிக்காய்க்கு பங்கி லேப்ஸ்டர் என கேரி பெயரிட்டார்.

இதனை கொலம்பியா ஆற்றில் படகு போன்று பயன்படுத்தி, 73.5 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து உள்ளார். இதற்காக ஏறக்குறைய 26 மணிநேரம் செலவிட்டு உள்ளார்.

தொடக்கத்தில் பலத்த காற்று வீசியதுடன் அலைகளும் அவரை அச்சுறுத்தியுள்ளன. எனினும் துணிச்சலாக படகை செலுத்தி பாதுகாப்பான இடத்தில் இறங்கியுள்ளதுடன் இதனூடாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.