ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் பிறப்பித்த புதிய உத்தரவு: சத்தமாக தொழுவது தடை

0
37

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் உருவாக்கப்பட்ட நிலையில் பெண்கள் முன்னிலையில் ஒரு பெண் சத்தமாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலிபான் அமைச்சர் ஒருவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

”பெண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தொழுகை நடத்தும்போது நமது குரலை மற்ற பெண்கள் கேட்கும் வகையில் சத்தமாக குரானை ஓதக்கூடாது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தக்பிர் செய்யவே அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் பின்னர் எப்படி பாடுவதற்கு அனுமதிக்கப்படுவர்” குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டியது. எனவே அதனை வெளியாள்கள் கேட்பதற்கு அனுமதிக்கக் கூடாது. வெளியாள்கள் மட்டுமல்ல வெளி பெண்களும் கேட்கக் கூடாது என்றும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்த பின்னர் பள்ளிச் செல்வது முதல் பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்தனர். ஐ.நா தலிபான் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாத தலிபான் அரசு பல்வேறு தடைகளை தொடர்ந்து பெண்களுக்கு விதித்து வருகிறது.