ஜனாதிபதிக்கு கொடுத்த கடிதம் சமூக வலைதளங்களில் வந்தது எப்படி?: ரவி குமுதேஷ் கேள்வி

0
31

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இரகசியமாக அனுப்பப்படும் கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவது தொடர்பில் அவர் அவதானம் செலுத்த வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை அறிவிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க விடுத்த தனிப்பட்ட கோரிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்திற்கு அநுரகுமார திஸாநாயக்க பதிலளிக்கவில்லை. எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையின் பேரில் அவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் அந்த எதிர்ப்பு வந்தது. அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது. அவர் அதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை இறுதியாக அந்த வேட்புமனுவை அங்கீகரித்த அரசியலமைப்புச் சுதந்திர அமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு இரகசியமாக வழங்கப்படவில்லை. கடிதத்தை கையளித்த பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்தக் கடிதத்திற்கு எந்தப் பதிலும் இல்லாமல் திடீரென சமூக வலைதளங்களில் வந்தது ஏன் என்பது நமக்குப் புரிகிறது. இன்று ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அரசியல் கட்சியைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.