கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக வந்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்! – டொனால்ட் ட்ரம்ப்

0
28

அமெரிக்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

“சீன ஆதிபர் ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது.

அவர் அமெரிக்காவின் ஜனாதியாக வந்தால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும். பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகிவிடும்.

அமெரிக்காவின் மகன்களும், மகள்களும் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் போரில் சண்டையிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். 

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-ம் உலகப்போர் நிகழாமல் நிச்சயம் தடுப்பேன்” இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.