இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா

0
36

சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் சட்டவிரோதமாக நுழைந்த 29 லட்சம் பேரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.