ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக ஐவரின் பெயர்!

0
42

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் உயிரிழந்த நிலையில், கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைமைத்துவத்திற்கு ஐவரின் பெயர்களை பிரேரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பு இம்முறை காஸாவுக்கு வெளியே உள்ள சிரேஷ்ட தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ஹமாஸ் அமைப்பின் அரசியல் நடவடிக்கை பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் கலீல் ஹயாவுக்கு தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்படலாமெனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.