பிரதமர் ஹரிணி வேட்புமனுக்களில் கையொப்பம்

0
55

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (09) கையெழுத்திட்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி உட்பட இருபது பேர் வேட்புமனுக்களில் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதன்போது, அர்ப்பணிப்பும், திறமையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட அணியை வழிநடாத்தி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் தேர்தல்களில் மாபெரும் வெற்றியடைய உறுதியாக உள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.