முதல் முறையாக இஸ்ரேல் படைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய லெபனான்!

0
137

இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா மட்டுமே தாக்குதல் நடத்தி வந்துள்ள நிலையில் லெபனான் ராணுவம் தற்போது தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.