ஜீ தமிழ் ‘மகா நடிகை’: இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்

0
25

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியான மகா நடிகை தொடக்க விழாவில் இலங்கை தமிழ் ஊடக தொகுப்பாளர் கவி ப்ரியாவும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

அதில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைவரிடமும் கைதட்டல்களை பெற்றதுடன் கண் கலங்கவும் செய்தது. நீங்கள் எமக்கு கிடைத்த பொக்கிஷம் என வாழ்த்து மழை அவரை நோக்கி பொழிந்தன. விஜய் அன்டனி, சரிதா, அபிராமி உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர்.

அந்த ஷோவில் இலங்கையை சேர்ந்த கவிப்ரியா என்ற நடிகை அதில் பங்குபற்றியுள்ளார். இவர் தனது மீடியா பயணத்தை இலங்கையில் பிரபல தொலைக்காட்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தொடங்கி தொடர்ந்து மாடலிங், ஆல்பம் சோங், ஷாட் பிலிம் என தன்னை வளர்த்துக்கொண்ட இவர் தற்போது ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தும் வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் ஆரகன் திரைப்படம் வெளிவராயிருக்கிறது. 

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் நடைபெறும் மகா நடிகை போட்டியில் பங்கு பற்றியுள்ளார். அதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்கத்தா மருத்துவரின் நிலையை தத்ரூபமாக நடித்து காட்டியதோடு. அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார். அத்தோடு அந்த மகாநடிகை நிகழ்ச்சியில் தேர்வும் ஆகியுள்ளார்.