வனிதா விஜய்குமார் நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தவர். சில பிரச்சினைகளின் காரணமாக குடும்பத்தை விட்டு பிள்ளைகளுடன் தனியே வாழ்கிறார்.
இதுவரையில் இவர் மூன்று திருமணங்கள் செய்துள்ளார். அந்த மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்த நிலையில் நான்காவது திருமணம் எப்போது என்ற கேள்வி இவரை பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில், வனிதா விஜய் குமார் ரொபர்ட் மாஸ்டரின் கைகளைப் பற்றிக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்துவதைப் போல் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதில் ஒக்டோபர் 5 என பதிவிட்டு திகதியை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த அனைவரும், இவர்களுக்கு திருமணமா? அல்லது ஏதேனும் படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஏற்கனவே வனிதா மற்றும் ரொபர்ட் மாஸ்டர் இருவரும் காதலித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.