எச்.வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவே அவரது கடைசிப் படம் எனவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. அனிமல் திரைப்பட பொபி தியோல் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.