விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

0
32

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படம் எனவும் இதன்பின்னர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விஜய்யின் 69வது படத்தைத் தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். மேலும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படம் 2025 ஒக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை விஜய் 69 படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியில் வெளியான அனிமல் படத்தின் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு (01-09-2024) அறிவித்துள்ளது. இந்நிலையில் தளபதி 69 படப் பூஜை விழா வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.