அரச பங்களாக்களை மீள ஒப்படைக்க வேண்டும்: 47 பேர் தவறியுள்ளதாக தகவல்

0
22

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 50 பேரினுள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க பங்களாக்களை மீள ஒப்படைத்துள்ளதாக பொது நிர்வாகம், நீதிமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் மற்றும் தொழிலாளர் அமைச்சின் உள்ளக தகவல்கள் கூறுவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 10 பேர் வீடுகளை ஒப்படைப்பது தொடர்பில் விசாரித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.

அனைத்து அரசாங்க பங்களாக்களையும் மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாகம், நீதிமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் மற்றும் தொழிலாளர் அமைச்சுக்களுக்கு அண்மைய தினங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இவ்வாறு பங்களாக்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.