யாழில் பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

0
39

யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையிலேயே சந்தேக நபர் தனது நண்பனின் மகளுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே மாணவி தான் சந்தேக நபருடன் குடும்பம் நடாத்தி வருவதாகவும் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது.

சந்தேக நபரான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் சந்தேக நபரின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ய முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.