ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்: சிநேகபூர்வ கலந்துரையாடல்

0
75

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அவர் இதன்போது வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.