இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்; விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் வெளியீடு!

0
41

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு கலைத்து புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதன்படி வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4 முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறும். அதேவேளை புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21, 2024 அன்று கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.