ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராகிறாரா ரணில்?: பரவும் செய்திகள் போலியானவை

0
44

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என ஹேஷ்டேக் தலைமுறை உறுதி செய்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார். எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் பல்வேறு செய்திகளும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த சமூக வலைதளங்களில் பரவி வரும் சில செய்திகளில் “அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவராகப் பணியை ஏற்கப் போவதாக” குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டாரா என்பதை ஆராய ஆசிய வளர்ச்சி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தகவல்களை விசாரிக்க ஹேஷ்டேக் தலைமுறை முன்வந்துள்ளது.

எனினும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கான புதிய நியமனம் குறித்து எந்த தகவலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையினால் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அது 2 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒரு கட்டம் வேட்புமனு தாக்கல் என்றும் மற்றொரு கட்டம் தேர்தல் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 24 முதல் ஒக்ரோபர் 23ஆம் திகதி வரை 2024ஆம் ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் நேரம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இலத்திரனியல் முறை மூலம் தேர்தல் நடத்தப்படும் எனவும், அது ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அந்த இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஹேஷ்டேக் தலைமுறை உறுதி செய்துள்ளது.