ஜனாதிபதித் தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிட்ட சர்வஜனபலய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னலையாகவுள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன பலய அரசியல் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி நாட்டிற்கு பொறுப்புக்கூறும் பல புதிய அரசியல் முகங்களுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
சர்வஜன பலய கட்சியின் கீழ் போட்டியிட அநேகமானவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. திலித் ஜயவீரவின் தலைமையில் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் அதன் செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன பலய கட்சியின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் முழு நாட்டிலும் போட்டியிட அவசியமான நடவடிக்கைகள் தயாராகி வருவதாக அவர் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.