முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (30-09-2024) பிற்பகல் மத்துகம மின் மயானத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் குமார வெல்கம இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாகும்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வெல்கம கடந்த நேற்று முன்தினம் (28-09-2024) காலை உயிரிழந்துள்ளார். முன்னாள் அமைச்சர் குமார வெல்கம இறக்கும் போது அவருக்கு வயது 74.
மத்துகம, ஹொரவல, டென்னிஸ்டன்வத்தையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது அரசியல் சமகாலத்தவர்கள் மற்றும் கலைஞர்கள் அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
சடலம் தொடர்பான இறுதிக்கிரியைகள் வெல்கமவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் கண்ணீருக்கு மத்தியில் மத்துகம மின் மயானத்தில் இடம்பெற்றுள்ளது.