இலங்கைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு!

0
40

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழுவைச் சந்திப்பதற்காக ஒக்டோபர் 02 முதல் 04 வரை கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக உயர்மட்டக் குழு இலங்கக்கு சென்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.