புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை

0
39

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் முதல் வினாத்தாளுக்கான பரீட்சையை மீண்டும் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி நேற்று (30) பத்தரமுல்லை மற்றும் கொழும்பில் பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிற்பகல் அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆறு பெற்றோர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. கலந்துரையாடலின் பின்னர் பெற்றோர்கள் இதனை தெரிவித்திருந்தனர்.