இந்தியாவில் இந்து திருவிழாவின் போது நேர்ந்த துயரம்: சுமார் 40 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
52

கிழக்கு இந்தியாவில் இந்து மத விழாவின் போது 37 சிறுவர்கள் மற்றும் ஏழு பெண்கள் உள்ளிட்ட 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருக்கெடுத்த ஆறுகள் மற்றும் குளங்களில் இந்து மத சடங்கு முறையில் கலந்துகொண்டு குளித்தபோது இவர்கள் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஜிவித்புத்ரிகா என்பது மூன்று நாட்கள் நீடிக்கும் இந்து பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் இது ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண- பட்சத்தின் ஏழாவது முதல் ஒன்பதாம் சந்திர நாள் வரை கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் நல்வாழ்வைக் கொண்டாடும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகின்றது. பீகாரில் உள்ள அதிகாரிகள் கூறுகையில் பலர் திருவிழாவைக் கொண்டாட குளித்த போது நதிகளில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் கடந்த காலங்களில் திருவிழாக்களின் போது, ​​பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் இறுக்கமான இடங்களில் அதிக மக்கள் கூடும் போது, ​​இவ்வாறான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

ஜூலை மாதம், வடக்கு உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற மதக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.