கனடாவில் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய பீட்சா!

0
53

கனடாவின் எட்மாண்டன் பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்று மிகப்பெரிய பீட்சா வகை ஒன்றை விற்பனை செய்து வருகின்றது. இந்த பீட்சாவை சுமார் 60 பேர் உட்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னணி பீட்சா விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பிக் மாமா மற்றும் பாப்பா பிஸாரியா (Big Mama’s and Papa’s Pizzeria) என்ற பீட்சா விற்பனை நிறுவனம் இவ்வாறு புதியதாக பீட்சா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பீட்சாவின் எடை 20 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பீட்சாவின் சராசரி விலை சுமார் 350 முதல் 400 டாலர்கள் வரை என தெரிவிக்கப்படுகிறது. இந்த பீட்சாவை சுமார் 60 துண்டுகளாக வெட்ட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பீட்சாவை தயாரிப்பதற்கு மூன்று அல்லது நான்கு பேர் தேவை எனவும் இதனை விநியோகம் செய்வதற்கு இரண்டு பேரின் உதவி தேவை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கனவில் விநியோகம் செய்யப்படக்கூடிய வகையிலான மிகப்பெரிய பீட்சாவாக இந்த பீட்சா கருதப்படுகின்றது.