ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படம் அமரன்.
இதில் இராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி இத்திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.