புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: சிங்கப்பூர் தலைவர்கள் உறுதி

0
53

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என சிங்கப்பூர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில்,

“சிங்கப்பூரும் இலங்கையும் நுணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பாலும் நெருங்கிய உறவாலும் நீண்டகால நட்பு உறவை கொண்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் 55 ஆண்டுகால அரச தந்திர உறவை நினைவுகூரும் வேளையில் இரு தரப்புக்கும் இடையிலான உறவவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிங்கப்பூரும் இலங்கையும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருமித்த ஆர்வங்களைக் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் லோரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்த இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.