ரணிலுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்: உலகிற்கு முன்னுதாரணமாகியுள்ள ரணிலின் செயற்பாடுகள்

0
43

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்க அதற்கான விருப்பத்தை இது வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் ஆசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.