விளையாட்டு நிதியில் மோசடி: கணக்காய்வு கோரிக்கை

0
40

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விளையாட்டு நிதியில் இருந்து பணம் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஃபீஸ்டா (Sports Fiesta) தொடர்பான கணக்காய்வு கோருவதற்கு விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

சுமார் 400 இலட்சம் ரூபா செலவில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு பெருமளவு பணம் செலவழிக்கப்பட்டதாகவும், விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மோசடியான முறையில் செலவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விளையாட்டு ஊக்குவிப்பு என்பதைத் தாண்டி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிம்பத்தை உயர்த்தும் அரசியல் செயற்திட்டமே இது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.