26 மாதங்களுக்குள் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்: ரணிலின் திட்டங்கள் அம்பலம்

0
43

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள “தெரண” தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மொத்த உள்நாட்டு கடன் அளவு 12,442 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. 2024 ஜுன் மாதமளவில் 17,555 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராசிரியர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன் தேறியவகையில் அதிகரித்துள்மை தொடர்பில் அந்நிய செலாவணி விகித அதிகரிப்பினை உள்ளிட்ட துணை நிலைக் காரணிகள் எதுவுமே தாக்கம் ஏற்படுத்துவதில்லையென தெளிவுபடுத்தினார். அதாவது நேரடியாகவே கடன் பெற்றமையால் இந்த கடன் தொகை அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.