இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் இளையோருக்கு இடமளித்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் தமது அரசியல் சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்குப் பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் எனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.