வடமாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன், ஜனாதிபதி அனுரவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுர குமார கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய இனம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் நா.வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.