ரணில் அரசின் அனுமதிக்கு இடைக்கால தடை!

0
34

இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது.

அதன்படி ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சரவையின் தீர்மானம் கேள்விப்பத்திர நடைமுறையை மீறிய செயற்பாடு, ஊழல் என எபிக்லங்கா நிறுவனமும் அதன் நிறைவேற்று தலைவரும் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.