உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

0
52

உலக அளவில் இந்தியர்களே அதிகளவு புலம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக அளவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு 2020 ஆம் ஆண்டை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகமான மக்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களில் எந்த நாட்டவரும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதன்படி இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் பேர் வெளிநாட்டில் வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக மெக்ஸிகோ மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு 7.9 மில்லியன் பேர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. எனினும் 2020ஆம் ஆண்டு 17.9 மில்லியன் பேருடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 173 மில்லியன் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

எனினும் 2020 கணக்கெடுப்பின்படி 281 மில்லியன் மக்கள் உலக மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.