மன அழுத்தம் என்பது குடும்பம், தொழில் என இரண்டு வகையிலும் ஏற்படும். ஆனால் அண்மைக் காலமாக பணியிடத்தில் ஏற்படும் அழுத்தங்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அண்மையில் கேரளாவைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணொருவர் அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் உயிரிழந்தார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் உணவு டெலிவரி செய்ய சென்றவர் மோட்டார் சைக்கிளிலேயே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். அதேபோன்று மற்றுமொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா எனும் 45 வயதான பெண் நேற்று புதன்கிழமை அலுவலத்தில் வைத்து கதிரையில் அமர்ந்து வேலை செய்துVகொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
பணிச்சுமையால் பாத்திமா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கை வந்ததன் பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸ் உதவி ஆணையர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.