யாழ்ப்பாணத்தில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.