தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.
பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்களை செப்டம்பர் 21இல் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை அவர்களது மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதமும் விதித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடைச் சட்டத்தின்படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.