இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

0
106

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி சியம்பலாபிட்டிய, இலங்கை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் மின்சக்தி துறையில் 40 வருட அனுபவத்தை கொண்டவர்.

2004 – 2006 காலப் பகுதியில் இலங்கை வலுசக்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டுள்ள அவர் 1982-1984 இல் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் வலுசக்தி செயலணியிலும் பணியாற்றியுள்ளார்.

அது தவிர இலங்கை மின்சார சபையில் உற்பத்தி திட்டமிடல் பிரிவில் பிரதம பொறியாளராக கடமையாற்றியுள்ள அவர் மேலும் பல பதவிகளையும் வகித்துள்ளார்.

மின்சார பயன்பாட்டு திட்டமிடுபவராக பணியாற்றும் அவர் மின் உற்பத்தி தொகுதிகளைத் திட்டமிடுதல், கட்டண நிர்ணயம் ஆகியன அடங்குகின்றன.

மின்சார விலை நிர்ணயம், ஒன்றோடொன்று கிரிட் இணைப்பு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கிரிட் இணைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் மற்றும் ஆய்வுகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.