சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாடாளுமன்றம் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. இந்த சட்டமூலத்துக்கு மன்னரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த சட்டம் தாய்லாந்தில் இன்னும் 120 நாட்களுக்குப் பிறகு சட்டமாகிறது. இதன் மூலம் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய மூன்றாவது நாடாக தாய்லாந்து விளங்குகிறது.