பொருளாதார ரீதியில் பாகிஸ்தான் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இதனால் தொழிலின்மை, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என அந்நாட்டு மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் புனித யாத்திரைப் பயணம் செல்வதாக அனுமதி பெற்றுக் கொண்டு அரபு நாட்டுக்குச் செல்லும் பாகிஸ்தானியர்களில் பலர் அங்கே யாசகம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு யாசகம் பெறும் பாகிஸ்தானியர்களை பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது அரபு அமீரகம். அரபு அமீரகத்தில் பிடிபட்ட யாசகர்களில் 90 சதவீதமானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அந் நாட்டின் வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புனித யாத்திரை எனும் பெயரில் தங்கள் நாட்டுக்குள் நுழைந்து யாசகம் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுதி ஹஜ் அமைச்சம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.