புதிய ஜனாதிபதிக்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஆதரவு: ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதி

0
31

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் சுகாதாரத் துறையை சீர்திருத்தம் மற்றும் மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு, நாட்டின் மருத்துவ நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சார்பற்ற தொழிற்சங்கமான மருத்துவ நிபுணர்கள் சங்கம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதியளித்தது.

நாட்டில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான விடயங்களை விரிவாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பையும் கடிதமொன்றினூடாக அந்த சங்கம் கேட்டுக்கொண்டது.

இலங்கை மக்களின் நலனுக்காக பயனுள்ள சுகாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பங்காளர்களாக இருப்பதற்கான விருப்பத்தையும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் எடுத்துரைத்தது.