இலங்கையில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்பில் இந்தியாவின் றோ அமைப்பு முன்பே கூறியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று நாட்டின் புதிய ஆட்சியாளராக ஆட்சிபீடம் ஏறியுள்ளார்.
அதேவேளை அனுர இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் மோடி அரசாங்கம் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. காரணம் இந்தியாவை விட சீனாவின் பக்கமே அனுர நட்பு பாராட்டி வருவதாக இந்தியா நம்புகின்றது.
அதேவேளை இலங்கையை தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கு இந்தியா மற்றும் சீனா பனிப்போர் நிகழ்த்திவரும் நிலையில் இலங்கையில் அனுரகுமார ஆட்சிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.