எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடுவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்ததை அடுத்து இலங்கை பொதுத் தேர்தலை நோக்கிச் செல்கிறது.