இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க தலமைலான புதிய அரசாங்கம் பதிவியேற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000 ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியது. அதன்படி பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.