நாடாளுமன்றத் தேர்தலுக்காக 11 மில்லியன்: தேர்தல்கள் ஆணைக்குழு

0
30

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை திறைசேரிக்கு முன்னிலைப்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் செலவினங்களை வைத்து இந்த மதிப்பீட்டுத் தொகையை முன்னிலைப்படுத்தியுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பில் மேலும் கலந்துரையாட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு மிக விரைவில் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் நடத்தப்படும். 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுத் தொடர் நவம்பர் மாதம் 21ஆம் இடம்பெறும்.