ரணில் சஜித்துக்கு இடையூறு விளைவித்தார்: கூட்டணி அமைக்கத் தயார் இல்லை

0
37

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பாரிய இடையூறை ஏற்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கரமசிங்கவுடன் இணைந்து அரசியலில் ஈடுபட எவ்வித வாய்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு இடையூறு விளைவிக்கவில்லை எனின் சுமார் 13 இலட்ச வாக்குகளை விட அதிகம் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி மூலம் மாத்திரமே போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவது மொட்டுக் கட்சியுடன் இணைவதற்கு சமம் என்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில்- சஜித் ஒன்றிணைவது தொடர்பில் பேசுவதற்கு கூட ஐக்கிய மக்கள் சக்தி விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய நியாயங்களை மீண்டும் ஒருமுறை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்க தயாராக இல்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.