யாழில் ஆலயம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கும் நபர்; காரணம் என்ன?

0
32

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர், இன்று (24) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து ஆலயத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை சமூகமாக இயங்க விடுமாறு கோரியே குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் எனவும்  குறித்த  நபர் கோரிக்கை முன்வைத்துள்ளதாக  கூறப்படுகின்றது.