செந்தில் தொண்டமான் உட்பட்ட அறுவரின் இராஜினாமா; வர்த்தமானி வௌியானது

0
48

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார பதவியேற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.