சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ரீல்ஸ் என்ற பேரில் தங்கள் உயிரை பணயம் வைப்பதோடு மட்டுமன்றி உடன் இருப்பவர்களின் உயிரையும் ஆபத்தில் தள்ளுவது மிகப்பெரும் குற்றமாகும்.
அந்த வகையில், இந்தியாவில் ரீல்ஸ் மீது கொண்ட அதிக ஆசையால் பெண்ணொருவர் தன் உயிரை மட்டுமின்றி குழந்தையின் உயிரையும் சேர்த்து பணயம் வைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில் ஒரு பெண் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துள்ளார். குழந்தையொன்று அப்பெண்ணின் காலை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறது.
அவர் அக்குழந்தையை ஒற்றைக் கையில் பிடித்தபடி ஹிந்தி பாடலுக்கு உடலை வளைத்து நடனமாடுகிறார். அக்குழந்தை பதற்றத்துடன் தாயை இறுகப் பற்றியவாறு அந்தரத்தில் தொங்குகிறது.
இவ்வீடியோவைப் பார்த்தவர்கள் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொஞ்சம் கை தவறினாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.
ஆகவே உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் காட்சிகளை எடுப்போருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.