இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்பட உள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே டில்வின் சில்வா இந்த தகவலை தெரிவித்தார்.
எனினும் புதிய பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவே மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அனுரகுமார திசாநாயக்கவுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்றவர்களின் பட்டியில் லக்ஷ்மன் நிபுணஆரச்சி காணப்படுவதாகவும் டில்வின் சில்வா ,இதன்போது சுட்டிக்காட்டினார்.